இந்தியாவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 24,248 பேருக்கு கொரோனா உறுதி!

 

இந்தியாவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 24,248 பேருக்கு கொரோனா உறுதி!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே11 லட்சத்து 81ஆயிரத்து 818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 62 லட்சத்து 92 ஆயிரத்து 023பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 24,248 பேருக்கு கொரோனா உறுதி!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 24,248 பேருக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,73,165 லிருந்து 6,97,413ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4, 24, 433 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 693ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 24,248 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 24 மணிநேரத்தில் 425 பேர் பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவில் 2,06,619 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 1,11,740ஆக உயர்ந்துள்ள நிலையில் 8,822ஆக அதிகரித்துள்ளது.