2% க்கும் குறைவானவர்களே மட்டுமே ஐசியூக்களில் சிகிச்சை பெறுகின்றனர்- மத்திய சுகாதாரத்துறை

2% க்கும் குறைவானவர்களே மட்டுமே ஐசியூக்களில் சிகிச்சை பெறுகின்றனர்- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே ஐசியூக்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 10,53,552 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,61,695 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,467 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கு, வென்டிலேட்டர்களும், மூன்று சதவிகிதம் குறைவானவர்களுக்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் சிகிச்சையும் அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2% க்கும் குறைவானவர்களே மட்டுமே ஐசியூக்களில் சிகிச்சை பெறுகின்றனர்- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில், கொரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகவும்,சோதனை, தொடர்பில் இருந்தவர்களை தேடுதல், சிகிச்சை என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. முழு கவச உடை, முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றிற்கு பற்றாக்குறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.