கென்யாவில் இந்த ஆண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது!

 

கென்யாவில் இந்த ஆண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது!

கென்யாவில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாது என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே பள்ளி, கல்லூரிகள் திறப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் சில வளர்ந்த நாடுகள் ஆன்லைன் வழி கல்வியை நாடி சென்றுள்ளன. ஏழ்மையான மற்றும் இணைய வசதி இல்லாத மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகவே உள்ளது.

கென்யாவில் இந்த ஆண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது!

இந்நிலையில் கென்யாவில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாது என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கென்யாவில் 8,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 167 பேர் உயிரிழந்துள்ளனர்.