தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,000ஐ நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மட்டும் இல்லாது, மற்ற மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மாவட்ட நிர்வாகங்களின் அதிரடி நடவடிக்கையால் ஒரு சில மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கோடைகாலத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றியதால் சேலம் தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியிருப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகமாக செய்த மாநிலம் தமிழகம் தான் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக இல்லை என்றும் தெரிவித்தார்.