இதை செய்தால் கொரோனா மிகவும் அரிதான நோயாக மாறிவிடுமாம்!

 

இதை செய்தால் கொரோனா மிகவும் அரிதான நோயாக மாறிவிடுமாம்!

உலகம் முழுக்க அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டால் கொரோனா மிகவும் அரிதான நோயாக மாறிவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் இறுதி வரையிலான காலத்தில் 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 23 ஆயிரம் என்ற அளவில்தான் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இது 3 லட்சம் என்ற அளவில் இருந்தது. ஜனவரியில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதை செய்தால் கொரோனா மிகவும் அரிதான நோயாக மாறிவிடுமாம்!

தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு என்ற அளவிலேயே கொரோனாத் தொற்று உள்ளதாக கிடைத்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கொரோனா நோய் கண்டறியப்படுபவர்களில் 25 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகள் தென்படுவது இல்லை என்றும், 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை உள்ளது என்றும். அதில் உயிரிழப்பு என்பது 2 சதவிகிதமாக உள்ளது என்றும் புள்ளிவிவரம் கூறுகிறது.

“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மிக அரிதாக உள்ளது. கடந்த ஜனவரி 1 முதல் 30ம் தேதி வரையில் 10 கோடியே 7 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 10,262 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது மொத்த கொரோனா நோயாளிகளில் 0.01 சதவிகிதம் தான். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டால் எதிர்காலத்தில் கொரோனா தொற்று என்பது மிகவும் அரிதான நோயாக மாறிவிடும்” என்று அமெரிக்காவின் சென்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அன்ட் பிரிவென்ஷன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 46 மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவலை சென்டர் ஃபார் டிசீஸ் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் 12 முதல் 15 வயதினருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம் ஊரில் எப்போது எல்லோருக்கும் தடுப்பூசி கிடைக்குமோ, எப்போது கொரோனா தொற்று குறையத் தொடங்குமோ!