இந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா… 46 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா… 46 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா… 46 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு!

தினமும் 50 ஆயிரத்தைக் கடந்து கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுவதால் விரைவில் பிரேசிலை இந்தியா முந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா… 46 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு!
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60,963 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 23 லட்சத்து 29 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 லட்சத்து 39 ஆயிரத்து 600 பேர் நலமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 46,091 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா… 46 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு!
கொரோனா உயிரிழப்புகள் பட்டியலில் இந்தியா தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ள இங்கிலாந்தில் 46,526 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று இந்தியாவின் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதை நிலை நீடித்தால் இன்றைக்குள் இந்தியா உயிரிழப்பு பட்டியலில் நான்காவது இடத்துக்கு வந்துவிடும் என்று நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.