“பூட்டிய வீட்டுக்குள்ளும் புகுந்துடுறானாம்” -கொரானா பற்றி அடுத்த குண்டு

 

“பூட்டிய வீட்டுக்குள்ளும் புகுந்துடுறானாம்”  -கொரானா பற்றி அடுத்த குண்டு

கொரானாவைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான மக்களை கொன்றும் ,கோடிக்கணக்கான பேரினை பாதித்தும் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அதை பற்றி இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது .

“பூட்டிய வீட்டுக்குள்ளும் புகுந்துடுறானாம்”  -கொரானா பற்றி அடுத்த குண்டு

கொரானா பரவும் விதத்தை பற்றி ஆராய்ச்சியாளர்கள் தினம் ஒரு புது தகவலை வெளியிட்டு வருகிறார்கள் .அது மூக்கின் வழியாகவும் ,உமிழ் நீர் வழியாகவும் பரவுமென்பதால் அனைவரையும் உலக சுகாதார அமைப்பு மாஸ்க் அணிய சொன்னது .அடுத்து கைகள் மூலம் பரவுமென்பதால் கையுறை அணிந்து கொண்டார்கள் .
இப்போது ஹாங்காங்கில் உள்ள ஒரு வீடு 17 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் இருந்துள்ளது .அந்த வீட்டிற்குள் சென்று அங்குள்ள டாய்லேட்டில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போனார்கள் .ஏனெனில் அங்குள்ள டாய்லெட்டில் கொரானா வைரஸ் குடியிருந்துருக்கிறது .இது எப்படி பூட்டிய வீட்டுக்குள் வைரஸ் நுழைந்தது என்று ஆராச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தபோது ,அது பக்கத்து வீட்டின் கழிவு நீர் குழாய் மூலம் பரவி உள்ளே வந்திருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கருதினார்கள் .
ஏனெனில் 17 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சார்ஸ் கிருமிகள் இப்படித்தான் கழிவு நீர் குழாய் மூலம் பரவியது .அப்போது அந்த அப்பார்ட்மென்டிலுள்ள 40க்கும் மேற்பட்டோர் இறந்தார்கள் .அதை போலவே இந்த கொரானா வைரஸும் கழிவு நீர் குழாய்கள் மூலம் பூட்டிய வீட்டின் டாய்லெட்டுக்குள் புகுந்து பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார்கள் .இதனால் டாய்லெட்டுகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

“பூட்டிய வீட்டுக்குள்ளும் புகுந்துடுறானாம்”  -கொரானா பற்றி அடுத்த குண்டு