கொரோனாவால் ஆண்களுக்கே அதிகம் பாதிப்பு … வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

 

கொரோனாவால் ஆண்களுக்கே அதிகம் பாதிப்பு … வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

கொரோனா தொற்றுநோய் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பது தற்போது வெளியாகி வரும் கொரோனா பாதிப்பு விவரங்களின் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால் இது அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளது. டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண் பாலின ஹார்மோன் நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனா வைரஸால் ஆண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்பதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் ஆண்களுக்கே அதிகம் பாதிப்பு … வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

ஈஸ்ட்ரோஜன் என்படும் பெண்ணின் முக்கிய ஹார்மோன் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு , நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். டெஸ்டோஸ்டிரோன் ஆண் பாலின ஹார்மோன் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இதன் விளைவாக, பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட குறைவான நோய்த்தொற்றுகளையே அடைகின்றனர். டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவில் உள்ள ஆண்கள் பலவீனமானவர்களாக உள்ளார்கள். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அது பெரியளவில் பலன் அளிக்காது என்றும் தெரியவந்துள்ளது. எனவே டெஸ்டோஸ்டிரோனின் விளைவாக வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுநோய்களால் ஆண்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இதற்கான தெளிவான கட்டமைப்பை யாரும் இதுவரை முறையாக அளிக்கவில்லை.

கொரோனாவால் ஆண்களுக்கே அதிகம் பாதிப்பு … வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

பல ஆய்வுகளில் நோயெதிர்ப்பு செயல்பாடு அல்லது தனிப்பட்ட நோயெதிர்ப்பு உயிரணு வகைகளில் கவனம் செலுத்தியுள்ளன . ஆனால் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது பல்வேறு செல்கள், உறுப்புகள் மற்றும் திசுக்களால் ஏற்பட்டதாகும். இவை தொற்றுநோய்களுக்கு விரிவான பதிலை அளிக்கின்றன. இதை இரண்டு பிரிவுகளில் வரிசைப்படுத்தலாம். ஒன்று உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தகவமைப்பு நோய் எதிர்ப்பு சக்தி.

உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலின் முதல் நிலையாகும். நம் உடல் ஒரு வெளி உலக ஊடுருவலை கண்டறிந்தவுடன், இன்டர்ஃபெரான் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் போன்ற முக்கிய மூலக்கூறுகள் பரவலான தாக்குதலை தொடங்குகின்றன. அத்துடன் இந்த பி செல்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கி அதிவேகமாக செயல்படுகின்றன. அத்துடன் தடுப்பூசி கண்டறிதலில் புரதங்கள் அதி முக்கியத்துவமானது.

கொரோனாவால் ஆண்களுக்கே அதிகம் பாதிப்பு … வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

தகவமைப்பு நோயெதிர்ப்பு (Adaptive Response) டி & பி லிம்போசைட்களால் நடத்தப்படுகிறது. இது குறிப்பிட்ட பேத்தோஜென்னை எதிர்த்து வெளிப்படும். இந்த நோயெதிர்ப்பு சக்தி வெளிப்பட சில நாட்கள் ஆகும். இதன் முக்கியம்சம் என்னவென்றால் சில பேத்தோஜென்னுக்கு எதிராக இந்த செல்கள் ஒருமுறை தாக்க தொடங்கிவிட்டால், இந்த செல்கள் நம் உடலில் எப்போது ஏற்பட்டாலும் இவை அவற்றை தாக்கும்.

இரு பாலினங்களிலும் கொரோனா வைரஸுக்கு வயது ஒரு முக்கிய ஆபத்து காரணி. ஆண்களின் வயதில், அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது, வயதான ஆண்களில் தொற்றுநோய்களின் தீவிரத்தன்மை டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால் அதன் பாதிப்பு அளவும் கூடும். உதாரணமாக, நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஆண்ககளுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருக்குமேயானால் அவர்கள் தொற்றுநோய்களால் மருத்துவமனைக்குச் அதிகம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். டெஸ்டோஸ்டிரோன் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. இதனால் ஆண்கள் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட டெஸ்டோஸ்டிரோன்களே காரணம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.