சென்னையில் சுமார் 90ஆயிரம் பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்…

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,849பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 89,561பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 2,539 பேருக்கும் திண்டுக்கல்லில் 1,826 பேருக்கும் திருநெல்வேலியில் 2,972 பேருக்கும், ஈரோட்டில் 518, திருச்சியில் 2,686 பேருக்கும், நாமக்கல் 395 மற்றும் ராணிப்பேட்டை 2,784, செங்கல்பட்டு 10,495, மதுரை 8,705, கரூர் 296, தேனி 2,899 மற்றும் திருவள்ளூரில் 10,210பேருக்கு, தூத்துக்குடியில் 4,241 விழுப்புரத்தில் 2,501 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 520 பேருக்கும், திருவண்ணாமலையில் 4,444 தருமபுரியில் 486 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதேபோல் திருப்பூரில் 567, கடலூர் 1,991, மற்றும் சேலத்தில் 2,560, திருவாரூரில் 1,059, நாகப்பட்டினம் 480, திருப்பத்தூர் 659, கன்னியாகுமரியில் 2,721 மற்றும் காஞ்சிபுரத்தில் 5,697 பேருக்கும், சிவகங்கை 1,760 மற்றும் வேலூரில் 4,359 பேருக்கும், நீலகிரியில் 528 பேருக்கும், தென்காசி 1,344, கள்ளக்குறிச்சியில் 2,517 பேருக்கும், தஞ்சையில் 1,422, விருதுநகரில் 4,287, ராமநாதபுரத்தில் 2,692 பேருக்கும், அரியலூர் 710 மற்றும் பெரம்பலூரில் 248 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,186 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,627பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு...

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து...

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஐந்து மாதங்களாக இந்தியாவைப் படாத படுத்தி வருகிறது. லாக்டெளன் அறிவித்தும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டதாக அறிவித்துவிட்டது. பதிவு...

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியனது....
Do NOT follow this link or you will be banned from the site!