தமிழகம் முழுவதும் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

 

தமிழகம் முழுவதும் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,860 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழகம் முழுவதும் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் ஒரு லட்சத்து 15ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 8,569 பேருக்கும், திண்டுக்கல்லில் 4,645 பேருக்கும் திருநெல்வேலியில் 7,398 பேருக்கும், ஈரோட்டில் 1,349, திருச்சியில் 5,762 பேருக்கும், நாமக்கல் 1,181 மற்றும் ராணிப்பேட்டை 8,217, செங்கல்பட்டு 20,465, மதுரை 12,643, கரூர் 982, தேனி 9,703 மற்றும் திருவள்ளூரில் 19,382 பேருக்கு, தூத்துக்குடியில் 9,869, விழுப்புரத்தில் 5,117பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,611 பேருக்கும், திருவண்ணாமலையில் 8,622, தருமபுரியில் 987 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

இதேபோல் திருப்பூரில் 1,495, கடலூர் 6,505, மற்றும் சேலத்தில் 5,737, திருவாரூரில் 2,254, நாகப்பட்டினம் 1,504, திருப்பத்தூர் 1,998, கன்னியாகுமரியில் 7,359 மற்றும் காஞ்சிபுரத்தில் 13,576 பேருக்கும், சிவகங்கை 3,320 மற்றும் வேலூரில் 8,236 பேருக்கும், நீலகிரியில் 1,033 பேருக்கும், தென்காசி 3,814, கள்ளக்குறிச்சியில் 4,857 பேருக்கும், தஞ்சையில் 4,764, விருதுநகரில் 11,107, ராமநாதபுரத்தில் 3,957 பேருக்கும், அரியலூர் 1,715 மற்றும் பெரம்பலூரில் 889 பேருக்கும், புதுக்கோட்டையில் 3,990 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.