சென்னையில் ஒரு லட்சத்து 1,951 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,875 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

covid 19

சென்னையில் ஒரு லட்சத்து 1951 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 5,230 பேருக்கும் திண்டுக்கல்லில் 2,990 பேருக்கும் திருநெல்வேலியில் 5,572 பேருக்கும், ஈரோட்டில் 754, திருச்சியில் 4,416 பேருக்கும், நாமக்கல் 757 மற்றும் ராணிப்பேட்டை 5,469, செங்கல்பட்டு 15,312 மதுரை 11,352, கரூர் 560, தேனி 5,664 மற்றும் திருவள்ளூரில் 14,430 பேருக்கு, தூத்துக்குடியில் 7,628, விழுப்புரத்தில் 4,022 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,102 பேருக்கும், திருவண்ணாமலையில் 6,446, தருமபுரியில் 787 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

district wise details

இதேபோல் திருப்பூரில் 949, கடலூர் 3,415, மற்றும் சேலத்தில் 3,804, திருவாரூரில் 1,781, நாகப்பட்டினம் 789, திருப்பத்தூர் 1,234, கன்னியாகுமரியில் 5,092 மற்றும் காஞ்சிபுரத்தில் 9,785 பேருக்கும், சிவகங்கை 2,471 மற்றும் வேலூரில் 6,242 பேருக்கும், நீலகிரியில் 812 பேருக்கும், தென்காசி 2,315, கள்ளக்குறிச்சியில் 3,840 பேருக்கும், தஞ்சையில் 3,008, விருதுநகரில் 8,491, ராமநாதபுரத்தில் 3,338 பேருக்கும், அரியலூர் 1,023 மற்றும் பெரம்பலூரில் 524 பேருக்கும், புதுக்கோட்டையில் 2,383 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா  பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் அதற்கான தேர்வு...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. இந்த முறை...