கொரோனாவுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை வழங்க இங்கிலாந்து முடிவு!

 

கொரோனாவுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை வழங்க இங்கிலாந்து முடிவு!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய நோயான கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இதற்கான முறையான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத இந்த இக்கட்டான சூழலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன.

கொரோனாவுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை வழங்க இங்கிலாந்து முடிவு!

இந்நிலையில் கொரோனாவுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்ததில் நல்ல பலன் கொடுத்ததாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டெக்சாமெத்தசோன் மருந்தை உடனடியாக நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.