நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு… வராக்கடன் அதிகரிக்கும்! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

 

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு… வராக்கடன் அதிகரிக்கும்! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது, இதன் மூலம் வங்கிகளின் வராக்கடன் அதிகரிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார கருத்தரங்கை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று தொடங்கிவைத்துப் பேசினார்.

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு… வராக்கடன் அதிகரிக்கும்! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்அப்போது அவர், “கொரோனாத் தொற்றால் சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவை மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நாட்டின் உற்பத்தி, வேலை, நல்வாழ்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு… வராக்கடன் அதிகரிக்கும்! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பொருளாதார, சுகாதார பாதிப்பை சந்தித்து வருகிறோம். நிதி அமைப்பை பாதுகாக்கவும், பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பெருந்தொற்று தற்போதைய உலகின் வழக்கம், மதிப்பீடு, தொழிலாளர், முதலீடு இயக்கத்தை உலக அளவில் பாதித்துள்ளது.

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு… வராக்கடன் அதிகரிக்கும்! – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்சூழல் வரும் வரை காத்திருக்காமல், இடர்களை தாங்கும் வகையில் வங்கிகள் தங்கள் முதலீடுகளை அதிகரிக்கத் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி சூழலையும், முதலீட்டையும் வலிமையாக்க வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு அது பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக வங்கிகளின் வராக்கடன் அதிகரிக்கலாம். முதலீடுகள் குறையும் வாய்ப்புள்ளது. தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு மறுமுதலீடு திட்டம் மிகவும் அத்தியாவசியமானதாகும்” என்றார்.