வேலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி

 

வேலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் பா.கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை தி.மு.க சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர் பா.கார்த்திகேயன். இந்நிலையில் இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை முடிவு இன்று வெளியானதில் எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி

எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர் சென்று வந்த இடங்கள், அவரது உணவகம், தொழில் செய்யும் அலுவலகம் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போது தி.மு.க சார்பில் முதல் மேயராகவும் கார்த்திகேயன் இருந்துள்ளார்.