ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

 

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி இப்போது உலகம் முழுவதும் பரவி வல்லரசு நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மார்ச் மாத மத்தியிலிருந்து பரவல் அதிகரித்தது. மகாராஷ்டிராவில் அதிகளவில் நோய்த் தொற்று பாதிப்பு உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு உள்ளது.

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் தொடக்கத்தில் விமான நிலையங்கள் இருக்கும் மாநகரங்களில் அதிக தொற்று இருந்த நிலை முற்றிலும் மாறி, இப்போது குக்கிராமம் வரையில் கொரோனாவின் ஆதிக்கம் பரவிவிட்டது.

வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியான நிலையில் இப்போது, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

எம்.எல்.ஏ. காந்தி கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று உதவிகளைச் செய்தவர். மின்கட்டண குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிருத்தி திமுக நடத்தும் போராட்டத்தில் எல்லோரும் கலந்துகொள்ளும்படி தனது சமூக ஊடகப் பக்கங்களில் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும். தற்போது அவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

வேலூர் பகுதியில் கடந்த இரு வாரங்களாக கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நாளில் மட்டும் கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய சட்டமன்றங்களைச் சேர்ந்த‌ திமுகவின் மூன்று எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.