சென்னையில் மட்டும் 734 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சென்னையில் மட்டும் 734 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் மட்டும் 734 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் சென்னையில் இதுவரை 734 கர்ப்பிணிகளுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரனோ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. எழும்பூர் – தாய் சேய் நல மருத்துவமனையில் 62 பேரும், அண்ணா சாலை – கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகளுக்கும், ராயபுரம் – ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 74 பேருக்கும் கீழ்ப்பாக்கம் – மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 22 கர்ப்பிணிகளும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது. அரசு வழிகாட்டுதல் படி கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவ தேதி குறிப்பதற்கு 5 நாட்கள் முன்னதாகவே கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.