சென்னையில் இன்று ஒரே நாளில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 55லட்சத்து 25ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 47ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் 805 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்நிலையில் சென்னையில் இதுவரை 204 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரனோ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி பெண்களும், அரசு ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 45 கர்ப்பிணி பெண்களுக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகளுக்கும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 29 கர்ப்பிணிகளுக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதல் படி கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவ தேதி குறிப்பதற்கு 5 நாட்கள் முன்னதாகவே கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.