பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

 

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது

ரியோ: பிரேசிலில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா தொற்று நோயால் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. மேலும் அதிகபட்சமாக ஒரேநாளில் 54,771 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் இதுவரை மொத்தமாக கொரோனா தொற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,032,913-ஆக உள்ளது. மேலும் அந்நாட்டில் கொரோனாவால் 48,954 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இது உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. 21 கோடியே 20 லட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை அந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.