கொரோனா வைரஸ் விந்தணுவை பாதிக்குமாம்! – அதிர்ச்சி ஆய்வுத் தகவல்

 

கொரோனா வைரஸ் விந்தணுவை பாதிக்குமாம்! – அதிர்ச்சி ஆய்வுத் தகவல்

ஆண்கள் மத்தியில் குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு மேலும் வேட்டு வைக்கும் வகையில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது ஆண்களில் ஏழு சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மை தொடர்பான இனப்பெருக்க மண்டல பிரச்னை உள்ளது. குழந்தையின்மையால் அவதியும் தம்பதிகளில் 40 முதல் 50 சதவிகிதம் பேருக்கு ஆண்கள் காரணமாகவே குழந்தையின்மை பிரச்னை உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் விந்தணுவை பாதிக்குமாம்! – அதிர்ச்சி ஆய்வுத் தகவல்

இந்த நிலையில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இனப்பெருக்க மண்டல செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை கொரோனா வைரஸ் பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

இனப்பெருக்க மண்டல மருத்துவத் துறைக்கான மருத்துவ இதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கின்றன. மேலும் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் செயல் திறனைக் குறைப்பதும் தெரியவந்துள்ளது. கொரோனா நம்முடைய உடலில் டிஎன்ஏ அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உடலில் உள்ள புரதங்கள் சிதைக்கப்படுகிறது. இதன் காரணமாக விந்தணுக்கள் அழிக்கப்படுகின்றன என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த பாதிப்பு நிரந்தரமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான ஆய்வு தொடர்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஆண்கள் இனப்பெருக்க மண்டலத்தில் நிரந்தர பாதிப்பு வரும் என்பதற்கு ஆய்வு முடிவு எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட விந்தணு பாதிப்பை சரி செய்ய, பாரம்பரிய மருத்துவமான அஸ்வகந்தாவை எடுத்துக்கொள்ளலாம். சரியான தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, புகை – மது பழக்கத்தை கைவிடுவது, டெஸ்டோஸ்டீரான் அளவை கட்டுக்குள் வைப்பதும், மன அழுத்தம் தவிர்ப்பது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த பாதிப்பை சரி செய்யலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.