சளி, காய்ச்சல் மருந்துக்கு அனுமதி வங்கிவிட்டு கொரோனாவுக்கு மருந்து! – பாபா ராம்தேவ் மீது உத்தரகாண்ட் அரசு குற்றச்சாட்டு

 

சளி, காய்ச்சல் மருந்துக்கு அனுமதி வங்கிவிட்டு கொரோனாவுக்கு மருந்து! – பாபா ராம்தேவ் மீது உத்தரகாண்ட் அரசு குற்றச்சாட்டு

சளி, காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து தயாரிக்கிறோம் என்று அனுமதி பெற்றுவிட்டு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் கூறியுள்ளதாக உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதத் துறை குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சளி, காய்ச்சல் மருந்துக்கு அனுமதி வங்கிவிட்டு கொரோனாவுக்கு மருந்து! – பாபா ராம்தேவ் மீது உத்தரகாண்ட் அரசு குற்றச்சாட்டுகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கூறியது. மருந்தை விற்பனை செய்யவும் அனுப்பிவிட்டு விளம்பரமும் செய்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எதை வைத்து மருந்து தயாரிக்கப்பட்டது, யாருக்கு அளித்து பரிசோதனை செய்யப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனால் விளம்பரத்தை ஒளிபரப்ப மத்திய சுகாதாரத் துறையின் கீழ் உள்ள ஆயுஷ் துறை உத்தரவிட்டது.
மேலும் இந்த மருந்தை தயாரிப்பதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு வழங்கிய அனுமதி உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் ஆயுஷ் உத்தரவிட்டது. மருந்து தயாரிப்பு தொடர்பான அனைத்து தகவலையும் மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு வழங்கிவிட்டதாக ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்திருந்தார்.

சளி, காய்ச்சல் மருந்துக்கு அனுமதி வங்கிவிட்டு கொரோனாவுக்கு மருந்து! – பாபா ராம்தேவ் மீது உத்தரகாண்ட் அரசு குற்றச்சாட்டுஇது குறித்து உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேத மருந்து தயாரிப்பு அனுமதி வழங்கும் அதிகாரியை செய்தி நிறுவனம் தொடர்புகொண்டு கேட்டுள்ளது. அதற்கு அவர், “தங்களிடம் சளி, காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து தயாரிக்கப்போவதாகக் கூறி அனுமதி பெற்றனர். கொரோனாவுக்கு மருந்து தயாரித்துள்ளதாக அதற்கான விற்பனை அனுமதியைத் தரக்கோரி எங்களிடம் அவர்கள் கேட்கவில்லை. எதன் அடிப்படையில் கொரோனா கிட் தயாரிக்கப்பட்டது என்று அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
சளி, காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்க அனுமதி பெற்றுவிட்டு, கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று பாபா ராம்தேவ் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.