இந்தியாவில் 46 மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பாதிப்பு – ராஜீவ் கவுபா

 

இந்தியாவில் 46 மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பாதிப்பு – ராஜீவ் கவுபா

டெல்லி: இந்தியாவில் 46 மாவட்டங்களில் கொரோனா உறுதிப்படுத்துதல் விகிதம் தேசிய விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதில் இருந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு பலனாக பல மாநிலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் இன்னும் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில், 46 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் உள்ளது. ஆனால் நாட்டில் இந்த தேசிய விகிதம் 5.70 சதவீதமாக இருப்பதாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறியுள்ளார்.

இந்தியாவில் 46 மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பாதிப்பு – ராஜீவ் கவுபா

இந்த 46 மாவட்டங்களில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 12 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்கள் கொரோனா தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவை ஆகும். அதன்படி மும்பை, தானே, பால்கர், அவுரங்காபாத், ராய்காட், புனே, சோலாப்பூர், நாசிக், அகோலா, ஒஸ்மானாபாத், கோண்டியா மற்றும் ஜல்கான் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மேட்சல் மல்கஜ்கிரி, ஹைதராபாத், ரங்கரெட்டி மற்றும் சூர்யாபேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கொரோனா உறுதிப்படுத்தல் விகிதம் உள்ளது.