ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா! – அதிர்ச்சித் தகவல்

 

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா! – அதிர்ச்சித் தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாகத் தினம் தினம் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் மட்டும் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் சென்னையில் மட்டும் 5000 படுக்கைகள் உள்ளன.

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா! – அதிர்ச்சித் தகவல்

அதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது, சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்று கூறுவது தவறு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். நோளாயிகள் எண்ணிக்கையே 10 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்போது 5000 படுக்கையை வைத்து எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
கொரோனா நோயாளிகளிடம் அலட்சியம் காட்டக்கூடாது என்பதற்கு ஒரு நிகழ்வு ராஜஸ்தானில் நடந்துள்ளது. அங்கு கடந்த வாரம் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினர் 26 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று இரவு வந்துள்ளது. அதில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் நரோட்டாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா! – அதிர்ச்சித் தகவல்ஒருவருக்கு கொரோனா வந்ததால் குடும்பத்துக்கே பரவிவிட்டது. அவர்கள் எத்தனை பேருடன் பழகினார்கள், எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்பினார்கள் என்பது தெரியாது. எனவே, கொரோனா நோயாளிகளை கையாளுவதில் அரசு அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். இல்லை என்றால், செப்டம்பருக்குப் பிறகும் கூட பல லட்சங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.