கோவை கலெக்டரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டருக்கும் கொரோனா!

 

கோவை கலெக்டரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டருக்கும் கொரோனா!

கோவை கலெக்டரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கோவை கலெக்டரைத் தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டருக்கும் கொரோனா!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், கோவை ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளார்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் நேற்று 4,496 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று மட்டும் 5,000 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது.