இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா தொற்று! 24 மணி நேரத்தில் 331 பேர் உயிரிழப்பு!

ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் 71 லட்சத்து 89 ஆயிரத்து 861 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 8 ஆயிரத்து 240 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 35 லட்சத்து 30 ஆயிரத்து 766 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,56,611லிருந்து 2,66,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,29,215 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,466  ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரவில் 88,528 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 40,975 குணமடைந்துள்ள நிலையில், 3,169 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு 331 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular

`தூக்க நிலைக்கு செல்ல வைத்தார்; ஜிம்னாஸ்டிக் வீராங்கனையிடம் பாலியல் சில்மிஷம்!’- எஸ்கேப் ஆன பயிற்சியாளர் கைது செய்த போலீஸ்

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மனஅழுத்தம் பயிற்சி கொடுக்க வந்த பயிற்சியாளர் பாலியல் சில்மிஷம் கொடுத்துள்ளார். சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பயிற்சியாளரை கைது செய்தனர். சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் உத்தண்டி...

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன....

`இருதய நோயால் போராடிய சிறுமி; உயிரைக்காத்த மனித நேயம்!’- தலைமைக்காவலர், இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்

இருதய நோயால் உயிருக்கு போராடிய 5 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய சென்னை நகர காவல்துறை தலைமைக்காவலர் மற்றும் இன்ஸ்பெக்டரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் 5...

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தமிழக போலீசார்… சாத்தான்குளம் டு திருப்பத்தூர் 

கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் தொடங்கிய மார்ச் மாதத்தில் தமிழகம் முழுவதும் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. தங்களின் உயிரைப் பணயம் வைத்து...
Open

ttn

Close