திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?

 

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?

திருமலைத் திருப்பதி கோவிலில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கோவிலில் மக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகின் புகழ்மிக்க கோவில்களுள் ஒன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம். இங்கு கோவிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 60க்கும் மேற்பட்டவர்களுக்கு தொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவியதா என்று தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?
திருப்பதியில் வழக்கமாக ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர். கொரோனாத் தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் 8ம் தேதி முதல் ஶ்ரீவாரி ஊழியர்கள் சோதனை அடிப்படையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஜூன் 11ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்படத் தொடங்கியது. தற்போது 60 பேருக்கு மேல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சுழற்சி அடிப்படையில் பணியாற்ற வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் ஊழியர்கள் 60 பேருக்கு கொரோனா! – தரிசனத்துக்கு தடை வருமா?
ஒரு வாரம் கோவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு தற்போது அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் இரண்டு பேர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க விருந்தினர் மாளிகையை சிகிச்சை முகாமாக மாற்றும் பணியும் நடந்து வருகிறது. சித்தூர் மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாத் தொற்று கட்டுக்கள் வரவில்லை என்றால் மீண்டும் தரிசனத்துக்கு தடைவிதிப்பது பற்றி ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.