செங்கல்பட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!

செங்கல்பட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

செங்கல்பட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!

அதனை கருத்தில் கொண்ட அரசு, ஊரடங்கைக் கட்டுப்பாடுகளுடன் ஓரளவு தளர்த்தியது. அதனால் நாளொன்றுக்கு 400 முதல் 600 வரையிலேயே அதிகரித்து வந்த பாதிப்பு, பன்மடங்காக அதிகரித்தது. இதனையடுத்து கொரோனா அதிகமாகப் பரவியுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மற்றும் தேனியில் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது.

செங்கல்பட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. அதாவது அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5073 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.