சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்

சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,680 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,30,261ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, “தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.