திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு !

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு !

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டன. இதையடுத்து 80 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, கடந்த மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு !

கடந்த மாதம் 10 ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு 6000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 11 ஆம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாத இறுதியில் இருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு !

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு !
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகர், 4 பாதுகாவலர்கள், 5 இசை கலைஞர்கள் என 10 பேருக்கு கொரோனா கண்டறிப்பட்டுள்ளது. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி திருப்பதி கோயிலில் தரிசனம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.