இந்த ஆண்டு முழுக்க கொரோனா இருக்கும்! – அமைச்சர் ஜெயக்குமார் பகீர் பேட்டி

 

இந்த ஆண்டு முழுக்க கொரோனா இருக்கும்! – அமைச்சர் ஜெயக்குமார் பகீர் பேட்டி

இந்த ஆண்டு முழுக்க கொரோனா பாதிப்பு இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவாது, அது பணக்காரர்கள் வியாதி ஏழைகளுக்கு வராது, மூன்றே நாளில் கொரோனா அழிந்துவிடும் என்று எல்லாம் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. தற்போது இன்னும் ஒரு மாதத்தில் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பரவல் இருக்கும் என்று அதிர்ச்சி தகவலை நீதிமன்றத்தில் வெளியிட்டது. சரி அரசு கூறியபடி செப்டம்பரிலாவது கொரோனா முடியுமா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நேரத்தில், இந்த ஆண்டு முழுக்க கொரோனா தாக்கம் இருக்கும் என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை மாதவரம் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர், “மக்களின் எண்ணம் மற்றும் கருத்துக்கு மதிப்பளித்தே 10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. யாருடைய நிர்பந்தம் காரணமாகவும் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு முழுக்க கொரோனா இருக்கும்! – அமைச்சர் ஜெயக்குமார் பகீர் பேட்டி2020ம் ஆண்டு முடியும் வரை கொரோனா நீடிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க அனைத்து மண்டலங்களிலும் அமைச்சர் குழு ஆய்வு செய்து வருகிறது. சட்டத்தை வைத்து மட்டுமே மக்களை அச்சுறுத்த முடியாது. தொற்று ஏற்படாமல் இருக்க மக்களிடம் மன மாற்றம் வர வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையில் மட்டும் 11 ஆயிரம் களப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.