கோவையில் பொதுமக்களை கவர்ந்த “கொரோனா வாரியர்ஸ் கேக்”

 

கோவையில் பொதுமக்களை  கவர்ந்த “கொரோனா வாரியர்ஸ் கேக்”

கோவை

கொரோனா முன்கள பணியாளரான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் கவுரவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் கண்காட்சி நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டிற்கான கேக் கண்காட்சி இன்று காலை தொடங்கியது.

கோவையில் பொதுமக்களை  கவர்ந்த “கொரோனா வாரியர்ஸ் கேக்”

இதில் பிளம் கேக், ப்ரூட் கேக், வால்நட் கேக் உள்ளிட்ட பல்வேறு பிளேவர்களில், பல விதமான வண்ணங்களில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கோவையில் பொதுமக்களை  கவர்ந்த “கொரோனா வாரியர்ஸ் கேக்”

சுமார் 10 கிலோ எடையிலான அந்த கேக்கில் மருத்துவர் ஒருவர் கையில் தடுப்பூசியுடன் நிற்பது போன்றும், போலீசார், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கிருமி நாசினி மற்றும் முகக் கவசம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

கோவையில் பொதுமக்களை  கவர்ந்த “கொரோனா வாரியர்ஸ் கேக்”

இவை தவிர்த்து, பிளமிங்கோ பறவைகள், அலுவலக பேக், சின்ட்ரல்லா பொம்மை, குரங்கு பொம்மை என பல்வேறு வடிவிலான கேக்குகளும் இடம் பெற்றுள்ளன. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.