30 பேருக்கு கொரோனா எதிரொலி: புழல் சிறையில் கொரோனா வார்டு அமைப்பு…!

30 பேருக்கு கொரோனா எதிரொலி: புழல் சிறையில் கொரோனா வார்டு அமைப்பு…!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் 874 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது.

30 பேருக்கு கொரோனா எதிரொலி: புழல் சிறையில் கொரோனா வார்டு அமைப்பு…!

இதனிடையே புழல் சிறையில் தண்டனை பிரிவில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 94 கைதிகள் மற்றும் 19 சிறைக்காவலர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புழல் சிறையில் இருந்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளுக்கு சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் நேற்று 30 கைதிகளுக்கு கொரோனா உறுதியானது.

30 பேருக்கு கொரோனா எதிரொலி: புழல் சிறையில் கொரோனா வார்டு அமைப்பு…!

இந்நிலையில் புழல் சிறையில் தண்டனைக் கைதிகள், தூய்மைப் பணியாளர் என 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சிறப்பு வார்டு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.