இரண்டு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – உலகளவில் நிலவரம்

இரண்டு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – உலகளவில் நிலவரம்

2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. நான்கு மாதங்களாக இந்தியாவின் தீராத பிரச்னை கொரோனா நோய்த் தொற்றுதா. நாள்தோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இன்றைய தேதி வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வில்லை என்பதே கவலை அளிக்கும் செய்தி.

இரண்டு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – உலகளவில் நிலவரம்

பல நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயன்று வருகின்றனர். பல கட்ட சோதனைகளில் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புவோம்.

இன்று (ஆகஸ்ட் 8-ம் தேதி, காலை)  உலகளவில் கொரோனா நிலவரத்தைப் பார்ப்போம்

இரண்டு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – உலகளவில் நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 1 கோடியே 95 லடசத்து 45 ஆயிரத்து 329 பேர். இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கோடியை எட்டு விடும் என கணிக்கிறார்கள்.

கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 25 லட்சத்து 45 ஆயிரத்து 630 பேர்.

இரண்டு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – உலகளவில் நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 24 ஆயிரத்து 81 பேர். இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் இந்த எண்ணிக்கை கவலை அளிக்கக்கூடிய ஒன்றே.

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 62 லட்சத்து 75 ஆயிரத்து 618 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

இரண்டு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – உலகளவில் நிலவரம்

நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் 50 லட்சத்து 95 ஆயிரத்து 524 பேரும், பிரேசில் நாட்டில் 29 லட்சத்து 67 ஆயிரத்து 64 பேரும் இந்தியாவில் 20 லட்சத்து 99 ஆயிரத்து 611 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், கடந்த சில நாள்களாக புதிய நோயாளிகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துவருவது பெரும் கவலை அளிக்கும் செய்தியாகும்.