“வரும் நவம்பர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும்”.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

“வரும் நவம்பர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும்”.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,424 ஆக அதிகரித்துள்ளது. அதே போல குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,69,798 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனாவால் 9,520 ஆக உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இங்கு கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.

“வரும் நவம்பர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும்”.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. இந்த நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் உச்ச நிலையை அடையும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால், கொரோனா உச்சத்தை அடையும் கால அளவு நீடித்துள்ளது. அதாவது 37 நாட்களில் இருந்து உச்சத்தை எட்டும் கால அளவு 74 நாட்களாக அதிகரித்துள்ளது என்றும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு 97%ல் இருந்து 69% ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“வரும் நவம்பர் மாதம் கொரோனா உச்சத்தை அடையும்”.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

தொடர்ந்து, வரும் நவம்பர் மாதத்திற்குள் கொரோனாவுக்கு எதிரான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை 60% செயல்திறனுடன் இயங்கினால் மட்டுமே நவம்பர் முதல் வாரத்தில் கொரோனாவை சமாளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அவ்வாறு செயல்பட்டால் தான் ஐசியூ படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவையை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.