உச்சத்தில் கொரோனா.. சுகாதாரத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

 

உச்சத்தில் கொரோனா.. சுகாதாரத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 1,45,384 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவான கொரோனா பாதிப்பு தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் இரவு நேர லாக்டவுன் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன.

உச்சத்தில் கொரோனா.. சுகாதாரத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 794 பேர் உறுதியானதாகவும் 77,567 பேர் டிஸ்சாரஜ் ஆகி வீடு திரும்பியதாகவும் 10,46,631 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

உச்சத்தில் கொரோனா.. சுகாதாரத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் தேவைப்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். அதன் படி, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.