Home இந்தியா 'குறைந்து வரும் கொரோனா': ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

‘குறைந்து வரும் கொரோனா’: ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தயாராகி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட தொடங்கிவிட்டன. சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்த மத்திய அரசு, பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படவிருப்பதாக அறிவித்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. இதனிடையே, புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த கொரோனா பாதிப்பு 1,04,95,147 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 202 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதால், மொத்த பாதிப்பு 1,51,529 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 1,01,29,111 பேர் குணமடைந்த நிலையில் 2,14,507 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா, 6பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 9கோடியே 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

திருப்பத்தூரில் எருது விடும் விழா கோலாகலம் ; 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தோக்கியம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருது விடும் விழா விமரிமையாக நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி,...

கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்த ஒரு சிறு பக்க விளைவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

பாஜகவுக்கு ஏற்பட்ட அவமானம்: மோசமான செயல்பாடு உடைய முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒப்பிடும்போது இந்தியா முழுவதும் 59.22 சதவீத மக்கள் நரேந்திர மோடியின் ஆட்சியை விரும்புவது 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில்...
Do NOT follow this link or you will be banned from the site!