‘ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா’ : புதிய கொரோனா பரவலின் நிலை என்ன?

‘ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா’ : புதிய கொரோனா பரவலின் நிலை என்ன?

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

‘ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா’ : புதிய கொரோனா பரவலின் நிலை என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், லண்டனில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அங்கிருந்து இந்தியா வந்தவர்கள் மூலமாக, இந்தியாவிலும் 30க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் உறுதியாகியிருக்கிறது. கொரோனாவின் இந்த புதிய நிலை, 70% அதிகம் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா அதிவேகமாக பரவும் பட்சத்தில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

‘ஒரே நாளில் 16,505 பேருக்கு கொரோனா’ : புதிய கொரோனா பரவலின் நிலை என்ன?

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,505 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,03,40,470 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 214 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,49,649 ஆக உயர்ந்திருப்பதாகவும் கொரோனாவில் இருந்து 99.46 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் தற்போது 2.43 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.