குறைந்து வரும் கொரோனா பரவல் : சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!

 

குறைந்து வரும் கொரோனா பரவல் : சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 37,154 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து கொண்டே வந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை தளர்த்தி தளர்வுகளை அளித்தன. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. அதாவது, 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்பு 45 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மீண்டும் ஆயிரத்தைக் எட்டியது. இதையடுத்து, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. அதன் படி, பாதிப்பு அதிகமாக இருக்கும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தின.

குறைந்து வரும் கொரோனா பரவல் : சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 39,649 பேர் குணமடைந்ததாகவும் 724 பேர் பலியானதாகவும் 4,50,899 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா பரவல் : சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!

மேலும், மொத்த பாதிப்பு 3,08,74,376 ஆக உயர்ந்துள்ளதாகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை கடந்து 3,00,14,713 ஆக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களுக்கு மேலாக 40 ஆயிரத்துக்கு மேல் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் 40 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.