திடீரென அதிகரிக்கும் பாதிப்பு… உயரும் மரணங்கள்: மூன்றாவது அலையின் அறிகுறியா?

 

திடீரென அதிகரிக்கும் பாதிப்பு… உயரும் மரணங்கள்: மூன்றாவது அலையின் அறிகுறியா?

இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அந்த அளவுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் மூன்றாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கச் செய்தது. பாதிப்பு குறைவது போல குறைந்து மூன்றாவது அலை உருவெடுக்கக் கூடும் என வல்லுநர்கள் எச்சரித்தனர். அதன் படியே, கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்திருப்பது மூன்றாவது அலைக்கான அறிகுறியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

திடீரென அதிகரிக்கும் பாதிப்பு… உயரும் மரணங்கள்: மூன்றாவது அலையின் அறிகுறியா?

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 509 பேர் பலியானதாகவும் 31,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் 3,59,775 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 4 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு மேல் பதிவாகிறது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.