அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. மீண்டும் லாக் டவுனா?

 

அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. மீண்டும் லாக் டவுனா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுப்பதால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து கொண்டிருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக இல்லை.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. மீண்டும் லாக் டவுனா?

இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 18,599 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று பாதிப்பு அதிகம் தான். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல, 14,278 டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகளும் டிஸ்சாரஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் கூட குறைந்திருக்கிறது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா.. மீண்டும் லாக் டவுனா?

மொத்த கொரோனா பாதிப்பு 1,12,29,398 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,88,747 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,853 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.