அதிரடியாக குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

 

அதிரடியாக குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 5ஆவது நாளாக 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டு விட்டது. முதல் அலையின் போதே இரண்டாம் அலை வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதிப்பு இந்த அளவுக்கு இருக்கும் என்பதை மத்திய அரசு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனாலேயே, இரண்டாம் அலையின் தொடக்கத்தில் மாநில அரசுகள் அனைத்தும் பாதிப்பை கட்டுப்படுத்த திணற வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

அதிரடியாக குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,795 பேர் உயிரிழந்ததாகவும் 2,55,287 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிரடியாக குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1.65 லட்சம், நேற்று 1.52 லட்சமாக இருந்த நிலையில் இன்று 1.27 லட்சமாக குறைந்துள்ளது. அதே போல, கொரோனா மரணங்களும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்ததோடு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 20 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால், இந்தியா விரைவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டுவிடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.