எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… நாளுக்கு நாள் புதிய உச்சம் : அதிர்ச்சி ரிப்போர்ட்!

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… நாளுக்கு நாள் புதிய உச்சம் : அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 2.73 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைகின்றது. வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சில மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர பொதுமுடக்கம் போன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிப்பு பன்மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… நாளுக்கு நாள் புதிய உச்சம் : அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 1,44,178 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் 19,29,329 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

எகிறி அடிக்கும் கொரோனா பாதிப்பு… நாளுக்கு நாள் புதிய உச்சம் : அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 2.34 லட்சம், நேற்று 2.61 லட்சமாக இருந்த நிலையில் இன்று 2.73 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே போல, இதுவரை இல்லாத அளவாக 1,619 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.