நாளுக்கு நாள் குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

 

நாளுக்கு நாள் குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80,834 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,303 பேர் உயிரிழந்ததாகவும் 1,32,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,26,159 ஆக குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,94,39,989, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,80,43,446, உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,384 ஆக அதிகரித்துள்ளதாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 91 ஆயிரம், நேற்று 84 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 80 ஆயிரமாக குறைந்துள்ளது. நாளொன்றுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலை மாறி, தற்போது தொடர்ச்சியாக 6 நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகிறது. அதே போல, கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் கணிசமாக உயருவதால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதன் மூலமாக, கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியா மீண்டு வருவது தெளிவாக தெரிகிறது.

நாளுக்கு நாள் குறையும் பாதிப்பு… கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீளும் இந்தியா!

எனினும், மூன்றாவது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தற்போது இருப்பதைப் போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில், இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.