கொரோனா செகண்ட் வேவ்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பும் மரணமும்!

 

கொரோனா செகண்ட் வேவ்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பும் மரணமும்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 1,31,968 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை கையாளுமாறு அவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இன்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா செகண்ட் வேவ்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பும் மரணமும்!

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாகவும் 780 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும் 61,899 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது 9,79,608 பேருக்கு நாடு முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா செகண்ட் வேவ்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பும் மரணமும்!

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1.15 லட்சமாக இருந்தது. நேற்று 1.26 லட்சமாக அதிகரித்த நிலையில் இன்று 1.31 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.