‘கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது’ உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 

‘கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது’ உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் அதிவேகமாக மனிதர்களிடையே பரவி வருவதாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் முதலே உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தாண்டு மார்ச் மாத இறுதியிலிருந்து இந்தியாவில் ஊரடங்கு அமுலில் இருந்தாலும் நோய்த் தொற்றல் முழுமையாக நின்றுபோகவில்லை. மாறாக, அதிகரித்துக்கொண்டே பெரும் அச்சத்தை அளித்துவருகிறது. இதனால், சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கையைக் கடுமையாக்கி வருகின்றன. அவற்றுள் தமிழ்நாடும் அடங்கும்.

ஜூன் 18-ம் தேதி 150,000 நபர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிக்கை சொல்கிறது.

‘கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவுகிறது’ உலகச் சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றலைக் கவனித்து வரும் உலகச் சுகாதார அமைப்பு நாள்தோறும் நோய்ப் பரவலையும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளல் முறைகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர், கொரோனா நோய்த்தொற்றல் சர்வதேச அளவில் விரைவாகப் பரவிவருகிறது. ஜூன் 18-ம் தேதி 150,000 நபர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றலின் வேகம் அதிகமாக இருக்கிறது. தெற்காசியாவிலும்தான்.

உலகமே இப்போது புதிய அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. நோய் அதிவேகமாகப் பரவுவதை அந்நாடுகள் உணர வேண்டும். மக்கள் வாய். மூக்கு உள்ளிட்டவற்றை மறைக்கும் மாஸ்க் அணிந்துகொள்வதும், மற்றவர்களிடமிருந்து தனிமனித இடைவெளியைப் பேணுவதும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் மிகவும் அவசியம். ஒவ்வொரு நாடும் நோய்த்தொற்றலின் தொடக்கத்திலேயே சோதனை செய்வதும், தனிமைப்படுத்துவது, டிராக் செக் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்திள்ளார். மேலும் நாடுகள் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.