இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா !

 

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா !

இதுவரை உலகம் முழுவதும் 81 லட்சத்து 12 ஆயிரத்து 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 39 ஆயிரத்து 35 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 42 லட்சத்து 13 ஆயிரத்து 226 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா !

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா !

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,32,424லிருந்து 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,80,013 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது கொரோனா தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 10,215 பேர் குணமடைந்துள்ளனர்; 380 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 1,10,744  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 56,049 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4,128 பேர் உயிரிழந்துள்ளனர்.