‘2ம் அலையில் கொரோனா’: மீண்டும் தலைதூக்கும் வைரஸ் பாதிப்பு – உஷார் மக்களே!

 

‘2ம் அலையில் கொரோனா’: மீண்டும் தலைதூக்கும் வைரஸ் பாதிப்பு – உஷார் மக்களே!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2ம் கட்ட அலையில் இருப்பதால் மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘2ம் அலையில் கொரோனா’: மீண்டும் தலைதூக்கும் வைரஸ் பாதிப்பு – உஷார் மக்களே!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் 2ம் கட்ட அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில் பல நாடுகள் மீண்டும் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இதே நிலை தான் இந்தியாவிலும் நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக, அதாவது தீபாவளி பண்டிகைக்கு பிறகு குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு, அம்மாநில அரசுகள் இரவு நேர காலவரையற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. இவ்வாறு கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்திருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

‘2ம் அலையில் கொரோனா’: மீண்டும் தலைதூக்கும் வைரஸ் பாதிப்பு – உஷார் மக்களே!

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,209 பேருக்கு கொரோனா உறுதியானதால், இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,95,807 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 501 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,33,227 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 85,21,617 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 4,40,962 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.