ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,286 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரிசோதனை மாதிரி

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சி கள்ளிப்பட்டியை சேர்ந்த 75 வயது மூதாட்டி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை பார்க்க சென்ற மூதாட்டியின் உறவினரான திருச்சியை சேர்ந்த செவிலியர், மற்றும் அவரின் கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கள்ளிப்பட்டியில் அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு செய்யப்பட்ட சோதனையில் மூதாட்டி, 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் மற்றும் 56 வயது முதியவர் உள்ளிட்ட இரு ஆண்கள் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...