அசுர வேகம் காட்டும் கொரோனா : இதுவரை 5 லட்சத்து 46 ஆயிரத்து 547 பேர் பலி!
Jul 8, 2020, 07:35 IST1594173923000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 68லட்சத்து 49 ஆயிரத்து 076 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 46 ஆயிரத்து 547 பேர் பலியாகி உள்ளனர்.