தூத்துக்குடியில் கொரோனா சமூக பரவலாக இல்லை – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

 

தூத்துக்குடியில் கொரோனா சமூக பரவலாக இல்லை – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் கொரோனா சமூக பரவலாக இல்லை – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பு குறித்தும் அதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தூத்துக்குடியில் 113 பேருக்கு கொரோனா இருப்பதாகவும், அதில் 77 பேர் அரசு மருத்துவமனையில் சிகிசிகை பெற்று வருவதாகவும் கூறினார். கொரோனா இருப்பதை உடனே கண்டறிய மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிமாநிலங்களில் இருந்து வீடு திரும்பும் நபர்கள் முழுமையாக பரிசோதிக்கப்படுவதாகவும் மகாராஷ்டிராவில் இருந்து 1000 பேர் தூத்துக்குடி வந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், தூத்துக்குடியில் கொரோனா தொற்று சமூக பரவலாக இல்லை என்று தெரிவித்த அவர் அங்கு சிக்கியுள்ள வெளிமாநிலதொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.