கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த குற்றச்சாட்டில் உறுதியாக இருந்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டும் வரும் நிலையில், தற்போது அந்தக் குற்றச்சாட்டுக்கான மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

அமெரிக்காவின் குற்றச்சாட்டினை சீனா தொடர்ந்து மறுத்து வந்தாலும் அப்வப்போது முக்கிய ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது அமெரிக்கா. சீனாவின் இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று முதலில் சொல்லப்பட்டு வந்தது. பின்னர் இது சீனாவின் ஊகான் ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து வவ்வால்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ஆராய்ச்சி மையத்தில் கூண்டுக்குள் வவ்வால்கள் அடைக்கப்பட்டு அவற்றுக்கு உணவு வழங்கப்பட்டு வரும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி அது வைரல் ஆனது.

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டினை உறுதிப்படுத்தும் விதமாக அதாவது ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவல்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருக்கிறது . அமெரிக்க குடியரசு கட்சியின் பாராளுமன்ற வெளியுறவுக் க்குழு பிரதிநிதி மைக் மெக்கால், ஒரு பரபரப்புஅறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

அந்த அறிக்கையில், கொரோனா வைரஸ் சீனாவின் விலங்குகள் சந்தையிலிருந்து பரவவில்லை. அது ஊகான் ஆய்வுக் கூடத்திலிருந்து விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஆய்வுக்கூடத்தில் மனிதனை தாக்கும் வகையில் கொரோனா வைரஸை உருவாக்கவும் இதுபற்றி வேறு யாரும் அறிந்துகொள்ள முடியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

ஆய்வுக் கூடத்திலிருந்து விஞ்ஞானிகளால் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு முன்பாகவே ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்து உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான வலுவான சாட்சியங்கள் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

ஊகான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டிருக்கிறது . இதற்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் கேட்டிருக்கிறது. இந்த ஆய்வகம் செயல்படத் துவங்கி இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளை கையாளுகின்ற வசதி தேவைப்பட்டிருக்கிறது. கொரோனவைரஸ் அங்கிருந்து பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு இது மேலும் வலு சேர்த்திருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான இது போன்ற பல ஆதாரங்கள் உள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.